தொளதொள டாப்ஸ்..! – இளசுகளின் Temprature-ஐ எகிற வைக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

ரோஷினி ஹரிப்பிரியன்,(Roshini Haripriyan),விஜய் டிவி சீரியல் ரசிகர்களால் மறக்க முடியாதவர். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர். இதில், அந்த சீரியலின் முக்கிய கேரக்டரை மையப்படுத்திய ரோலில் நடித்ததால், இவர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.

தமிழ் டிவி சீரியல்களில் குடும்பக் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும், கணவன்– மனைவி இடையிலான பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதுபோல் மாமனார், மாமியார், நாத்தனார், அண்ணி கேரக்டர்களில் வில்லத்தனம் காட்டும் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கிடைத்து விடுகிறது.

ரோஷினி ஹரிப்பிரியன்

அந்த வகையில், விஜய் டிவியில் மக்களை அதிகளவில் கவர்ந்த சீரியல், பாரதி கண்ணம்மா. இதில், டாக்டர் பாரதி , மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்படுவார். தனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும், தன்னுடையது அல்ல என்ற பாரதியின் சந்தேகப்பட, அதனால் ஏற்பட்ட பிரச்னையில் கணவன் – மனைவி இருவரும் பிரிய நேரிடும். கணவனை பிரிந்த கண்ணம்மா, தனது குழந்தைகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் காப்பாற்றி, படிக்க வைப்பார்.

ரோஷினி ஹரிப்பிரியன்

இதில் ஒரு பெண் குழந்தை, தந்தையின் வீட்டிலேயே வளர்ப்பு மகளாக இருக்கும் என்பதும்,இந்த சீரியலில் கூடுதல் டிவிஸ்ட் ஆக இருந்தது. டாக்டர் பாரதி மீது ஒரு தலை காதல் கொண்ட மற்றொரு பெண் டாக்டர் என்பது, சீரியலின் இறுதி கட்டத்தில் தெரிய வரும். இதில், சீரியலின் ஒருபகுதி வரை, கண்ணம்மா கேரக்டரில் நடித்தது ரோஷினி ஹரிப்பிரியன்தான்.

அவரது நடிப்பு, இந்த சீரியலுக்கு முக்கிய பலமாக இருந்தது. கணவர் பாரதியிடம் தன்னை குற்றமற்றவள் என நிரூபிக்க ஒரு மனைவியாக கண்ணம்மா போராடும் காட்சிகளும், பெண் டாக்டரின் சதியால், மனைவி கண்ணம்மாவை நம்பாமல் டாக்டர் பாரதி, வேதனைப்பட்டு சண்டையிடும் காட்சிகளும், இந்த சீரியலை தினமும் தவறாமல் பார்க்கும்படி ரசிகர்களை தன் வசப்படுத்தியது.

---- Advertisement ----

ரோஷினி ஹரிப்பிரியன்

சினிமா நடிகையரை போலவே, டிவி சீரியல் நடிகையரும் மக்கள் மத்தியில் நல்ல பேமஸ் ஆகி விடுகின்றனர். போதாக்குறைக்கு சோஷியல் மீடியாவில் அவர்களை பற்றிய தகவல்களை அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதால், அவர்கள் சீரியலில் நடிக்காத போதும், மக்கள் மத்தியில் அதே இமேஜ் உடன் வலம் வருகின்றனர்.

ரோஷினி ஹரிப்பிரியன்

அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவ்வாக இருக்கும் அம்மணி ரோஷினி ஹரிப்பிரியன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பரவ விடுகிறார். அதன்படி, ப்ளூ கலர் ஜீன்ஸ் பேன்ட், ரெட் கலர் டீ ஷர்ட்டில் ரோஷினி ஹரிப்பிரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வெகு வேகமாக பரவி வருகின்றன.

பாரதி கண்ணம்மா சீரியலில் புரட்சிப்பெண்ணாக, சந்தேகப்படும் கணவனை எதிர்த்து, தன் பெண் குழந்தைகளை காப்பாற்ற போராடும் ஒரு நாயகியாக நடித்தவரா இவர் என, ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அம்மணி, தனது புகைப்படங்களில் உடை விஷயத்தில் தாராளம் காட்டுகிறார். மாடர்ன் டிரஸ்சிலும் மப்பு ஏற்றுகிறார்.

ரோஷினி ஹரிப்பிரியன்

சீரியல் நடிகையரில் பலரும், தங்களது அன்றாட நிகழ்வுகளை புகைப்படங்களாக, அப்டேட் செய்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் ரோஷினி புகைப்படங்களும் களத்தில் நிற்கின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

---- Advertisement ----