யுவன்சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்ததா? கொடுத்தது யார் தெரியுமா?

 

இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது மகனான யுவன்சங்கர் ராஜா இளைஞர்களை கொள்ளை கொள்ளும் வகையில் இசை அமைப்பதில் வல்லவர். இவருக்கு பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஏராளம் இளைஞர்கள் மட்டுமல்ல இளங்கையர்களும் இவரது பாட்டுக்கு அடிமை.

 துள்ளலான காதல் வரி பாடல்களுக்கு நேர்த்தியான முறையில் இசை அமைத்ததோடு காதலில் உண்டாகும் சோகத்தை சோகப்பாடல்களாக பலரும் ரசிக்கும் வண்ணம் இசை அமைப்பதில் இவர் கைதேர்ந்தவர்.இவர் 1997ல் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ படம் மூலம் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

 சமீபத்தில்தான் இவர் தனது பிறந்தநாளை மிகவும் நேர்த்தியான முறையில் கொண்டாடினார் அந்த பிறந்தநாளுக்காக அனைத்து ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுள்ளனர். தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களோடு கலந்துரையாடி அவர்களை மகிழ்விக்கும்  வகையில் பேசியிருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.

 25 ஆண்டுகளுக்கு மேல் திரைத் துறையில்150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் யுவன் சங்கர்ராஜா விற்கு தேசிய விருதுகளும் கிடைக்க படாத நிலையில் இந்த கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்ததை நினைத்து ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

 இவரின் அளப்பரிய செயல்களைப் பாராட்டி தான் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை  சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக 31வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் வேந்தர் மரிய ஜீனா ஜாக்சன் வழங்கியுள்ளது.மேலும் யுவனுடன் பிரபல விஞ்ஞானி டாக்டர் வி பாலகுருவுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.

இந்த விழாவில் பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.யுவன் சங்கர் ராஜா விருதினை வாங்குவதற்கு வந்தபோது அவர் மனைவி மிகவும் மகிழ்ச்சியோடு ஆர்வமாக பார்த்த விஷயங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பதிவிட அது வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக அவர் விருது பெற்ற காட்சி புகைப் படத்தை பதிவிட வைரலாகி உள்ளது.

தற்போது திரைத்துறையை சார்ந்த அத்தனை பிரபலங்களும் அவர்களது ரசிகர்களும் யுவன்சங்கர் ராஜாவுக்கு கிடைத்த டாக்டர் பட்டத்தை பார்த்து சந்தோஷப்பட்டு அதோடு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து விருது பெற்ற கையோடு நேற்று நடைபெற்ற நண்பர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …