சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படம்… திட்டமிட்டு பட்டையை கிளப்ப போகுது…. லைக்கா புரொடக்சன்ஸ்!

ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில்  துவங்கப்பட்ட இந்த லைக்கா புரொடக்ஷன்ஸ் 2008 ஆம் ஆண்டு பிரிவோம் சிந்திப்போம் என்ற படத்தை தயாரித்தது.பின்னர் அய்யங்காரன் இன்டர்நெஷனல் மூவிஸுடன் இணைந்து  தளபதி விஜயின் கத்தி படத்தை தயாரித்தது. தமிழ் திரை உலகின் நீண்டகாலக் கனவு படமான பொன்னியின் செல்வனை மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து தயாரித்த  தற்போது  கோலிவுட் பட உலகில் கொடி கட்டிப் பறக்கிறது.

 இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனமானது கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம், வட சென்னை, காப்பான்  போன்ற படங்களை தயாரித்து தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான நிறுவனமாக உருவெடுத்தது.

 அப்போது இந்த நிறுவனத்தின் வெளியீடான பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்தியா முழுவதும் மிகவும் ஆவலோடு காத்திருக்க கூடிய இந்த படத்தில் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக டைரக்டர் மணிரத்தினம் தரமான படத்தை எடுத்திருக்கிறார்.

 இந்த வருடத்தில் மட்டும் சுமார் 8 படங்களுக்கு மேல் ரிலீசாக கூடிய நிலையில் எந்த நிறுவனம் செயல்பட்டு உள்ளது. மேலும் இந்த நிறுவனமானது  தனது கடுமையான கட்டுப்பாடுகளுடன் நல்ல படங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது அந்த வரிசையில் சூப்பர் ஸ்டாரின் 170 படத்தை இவர்கள் கையில் எடுக்க உள்ளார்கள் எனவே அதற்கான திட்டத்தை இப்போதே தேடி வருகின்ற லைக்கா நிறுவனம் சூப்பர்ஸ்டார் இந்த படத்தை ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாக தருவதோடு தங்களின் பெயரை திரையுலக வரலாற்றில் தக்க முறையில் பதிவு செய்வதற்கு முயன்று வருகிறது.

மேலும் வைகைப் புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் இவரது கைவசம் தான் உள்ளது. தற்போது நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட கமலஹாசனின் இந்தியன் 2 படமும், ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் சந்திரமுகி இரண்டாவது பாகமும்  அடுத்தடுத்து வெளிவர கூடிய சூழ்நிலையில் இவர்கள் திட்டம் நிச்சயமாக வெற்றி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.