இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2023 வியாழக்கிழமை.bஜோதிடமானது வேகத்தின் கண்ணாக விளங்குகிறது என்று பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே திட்டமிடமும் அது சரியான வழியில் நடக்கவும் ஜாதகமானது நமக்கு உபயோக கரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உங்களது கடந்த கால கர்ம வினைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தக்க பரிகாரங்களை செய்து நிகழ்காலத்தில் நீங்கள் ஏற்படும் துன்பங்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள உதவக்கூடிய அற்புதமான கலை தான் இந்த ஜோதிட கலையாகும்.

 எனவே மனிதன் அவனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலாபலனை அடைகிறான் அதுவும் அவன் பிறந்த நேரம் மற்றும் தேதியை வைத்து கணிக்கப்படக்கூடிய ஜாதகத்தின் அடிப்படையில் அவரது பலாபலன் அமைகிறது.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருப்பதால் நீங்கள் மன நிம்மதியை பெறுவதற்காக ஆன்மீகத்தில் ஈடுபடுவது மிகவும் நல்லது. எனவே நீங்கள் இன்று ஆன்மீகத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி அடைய முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை வேலை தொடர்பான பயணம் ஏற்படும் இந்த பயணத்தின் மூலம் உங்களுக்கு சுமாரான நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடினமாக உழைப்பதன் மூலம் மட்டுமே வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பொறுப்புக்கள் அதிகரித்ததில் காரணமாக செலவுகள் அதிக அளவு ஏற்படும். இது மன கவலையை உங்களுக்கு தருவதால் நீங்கள் திட்டமிட்டு செலவிட வேண்டும்.

---- Advertisement ----

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாராகவே இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும்.

ரிஷபம்

 ரிஷப ராசி அன்பர்களே என்று நீங்கள் தைரியமான பாதையில் செல்லக்கூடிய நாள். உங்கள் பயத்தை விட்டு விட்டு தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள் கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை திறம்பட ஆக்கக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருந்தாலும் பொறுமையை கையாளுவதின் மூலம் சிறப்பான செயல்களை செய்து முடிக்க முடியும். எனவே நீங்கள் பணியிடத்தில் யோசித்து செயல்படுவது அவசியமாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கூடுதல் செலவுகள் ஏற்படக்கூடிய நாள் என்பதால் உங்களுக்கு கவலை ஏற்படும். இதை தவிர்க்க உங்கள் பணத்தை சேமிக்க என்ன செய்யலாம் போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் பாதிப்பு ஏற்படும். கண் எரிச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் கட்டாயம் கண் மருத்துவரை சந்திப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று நீங்கள் சுய முன்னேற்ற பாதையில் வீரு நடை போட்டு நடந்து செல்வீர்கள். சில லட்சியங்களை அடைய உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். இந்த நாள் உங்களுக்கு சுமுகமான நாளாக இருப்பதால் உங்களுக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடைச் சூழல் உங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே பணியில் நீங்கள் வெற்றி மேல் வெற்றி கூட குவிக்க முடியும் .தொழிலைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கடின உழைப்பின் மூலம் மட்டுமே உங்களது பணம் சேமிப்பாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் செலவும், வரவும் சமமாக இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நாள் என்பதால் நீங்கள் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். நம்பிக்கை உணர்வு அதிகரித்து இருப்பதால் நீங்கள் அமைதியோடு செயல்படவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக கிடைக்கக்கூடிய நாள் என்பதால் உங்கள் செயல்களை நீங்கள் திட்டமிட்டு முடித்து விடுங்கள். நீண்ட கால திட்டங்களுக்கு உகந்த நாளாக இருப்பதால் எதை செய்ய வேண்டுமோ அதை யோசித்து இன்றைய நாள் நீங்கள் செய்வது சிறப்பாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய பணி வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பின் மூலமும் சிறந்த முயற்சிகள் மூலமும் நல்ல நிலைக்கு நீங்கள் வருவீர்கள்.

 உங்களது தொழிலுக்கான அங்கீகாரம் உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். நிதி நிலைமையை பொறுத்தவரையில் திருப்திகரமாக உள்ளது. பணத்தை பயனுள்ள நோக்கத்திற்காக செலவு செய்யுங்கள் வங்கியில் இருப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நாளாக உள்ளது. ஆரோக்கியத்தில் எந்த சுனக்கமும் இல்லை எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே கையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக இன்றைய நாள் உங்களுக்கு கடினமான நாளாக இருப்பதால் நீங்கள் எதையும் முன் கூட்டியே அணுகுவது மிகவும் நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணிகளை திறமையாக செய்ய வேண்டும் என்றால் ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு இருக்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சற்று வளர்ச்சி குறைவாகவே இருக்கும். உங்கள் செலவை திட்டமிட்டு குறைத்துக் கொள்வதின் மூலம் நிதி ஆதாரங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சின்ன சின்ன பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இந்த நாள் முன்னேற்றத்திற்கு உகந்த நாள் அல்ல. உங்கள் அணுகு முறையில் எதார்த்தம் அவசியம் தேவை. எனவே இன்றைய நாள் ஜாக்கிரதையாக  இருப்பது மிகவும் நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை மேற்கொள்ளும்போது அவசியம் பொறுமையோடு நீங்கள் செய்ய வேண்டும். பனி சுமையும் அதிகரித்து இருப்பதால் கட்டாயம் பொறுமைதான் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்த அளவே இருக்கும் செலவுகள் அதிகரித்து உங்களுக்கு கவலையை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே திட்டமிட்டு செலவுகளை செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்திலும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இன்று தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மனக்கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று  இனிமையான தருணங்களை நீங்கள் சந்திக்கக்கூடிய நாளாக உள்ளது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக அளவு ஈடுபடுவதோடு அதில் பங்கு பெறவும் செய்வீர்கள். பதட்டத்திலிருந்து விடுபட இது மிகவும் நல்ல வாய்ப்பாக உங்களுக்கு இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியை மிக நேர்த்தியான முறையில் செய்யக்கூடிய நாள். சுய வளர்ச்சிக்கு வித்திடலாம். புதிய முயற்சிகளுக்கு அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை சிறப்பாக இருக்கும் குடும்பத்தோடு வெளியே சென்று வந்து மகிழ்வீர்கள். நிதியில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிகவும் சிறப்பான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. மன உறுதியோடு இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் திறம்பட இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்றைய நாள் மிகவும் அற்புதமான நாளாக உங்களுக்கு உள்ளது. உங்களின் ஆற்றலும் உறுதியும் அதிகரித்து இருப்பதால் இந்த நாள் உங்களுக்கு நன்மைகளை அதிகளவு கொடுக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் நீங்கள் அதிக அளவு வெற்றிகளை பெறுவீர்கள். நம்பிக்கையோடும் எதிலும் ஈடுபடுவீர்கள். உங்கள் பணிகளை விரைந்து முடிப்பதின் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக உள்ளது. நிதியில் ஸ்திரத்தன்மை இருப்பதால் உங்கள் சேமிப்புக்கள் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. உறுதியான போக்கு காரணமாக உங்களுடைய ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று புத்திசாலித்தனம் உங்களிடம் அதிகமாக வெளிப்படும். சமநிலையாக எதையும் அணுகுவதின் மூலம் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த நாளை நன்கு பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் மந்தமான நிலையை உள்ளது. எனினும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தென்படுகிறது. நேரப்படி பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடியதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். திறமையாக பணியாற்றக்கூடிய நிலை இன்றைய நாள் உள்ளது.

 நிதி நிலைமையை பொருத்தவரை சுமாரான வளர்ச்சியை காணப்படும். பணத்தை கவனமாக செலவு செய்வது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நாள் என்று சொல்ல முடியாது. பதட்டத்தை தவிர்க்க நீங்கள் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் எதையும் செய்து முடிக்கக்கூடிய நாளாக திகழ்கிறது.பலன்களை எதிர்பாராமல் நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். எனவே எதையும் செய்யும்போது நீங்கள் தயங்காமல் செய்யவும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிபுரியக்கூடிய இடத்தில் உங்களுக்கு உகந்த சூழ்நிலை இல்லை .அதிக பணிகள் காரணமாக அசௌரியங்கள் ஏற்படலாம். எனவே பணியில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது.

 நிதி நிலைமையை பொருத்தவரை வீட்டில் முன்னேற்றத்திற்காக செலவுகளை செய்வீர்கள். நெருங்கிய சொந்தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கும். எனவே திட்டம் போட்டு எதையும் செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கவனம் இருக்க வேண்டும் மகிழ்ச்சியான விஷயங்களை லேசாக எடுத்துக் கொண்டால் உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை சுணக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று உங்களது விருப்பங்கள் எல்லாம் நிறைவேறக்கூடிய அற்புதமான நாளாக உள்ளது. முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதின் மூலம் உங்களுக்கு வெற்றிகள் அதிகம் வந்து சேரும் என்று புரிந்து கொண்டு இந்த நாளை உங்களது நாளாக மாற்றி கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை சக பணியாளர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணியை பொறுத்தவரை நீங்கள் திறம்பட பணியாற்றி உங்கள் செயல் திறனை நிரூபிக்கக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். சுப நிகழ்ச்சிக்காக பணத்தை நீங்கள் பயன்படுத்துவீர்கள். எனவே நிதியை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

 ஆரோக்கியமும் அதுபோல மகிழ்ச்சிகரமாக இருக்கு.ம் எந்தவிதமான ஆரோக்கிய சீர்கேடுகள் உங்களுக்கு ஏற்படாது. எனவே இந்த நாளை நீங்கள் சிறப்பாக மாற்றி விடுங்கள்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு பொதுவாக சிறப்பான நாளாக அமைந்துள்ளது  பயனுள்ள முடிவுகளை எடுக்க இன்று நீங்கள் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் இலக்குகளை நீங்களே அமைத்து அதை உடனடியாக அடையக்கூடிய வகையில் பணிகளை மேற்கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியம் அதிக உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கையில் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும் அதில் சிறிது பணத்தை பயனுள்ள விஷயங்களுக்காக செலவு செய்து மகிழ்வீர்கள்.

 ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும். முழு ஆரோக்கியத்தோடு நீங்கள் சிறப்பாக இருக்கக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது. எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சம் வேண்டாம்.

---- Advertisement ----