இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை. வாழ்க்கையில் எல்லா விதமான நலன்களையும் பெற இறைவழிபாடு தியானம் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமக்கு ஏற்படும் கஷ்ட காலங்களில் நமக்கு கை கொடுத்து உதவி செய்யும். எனவே நம்பிக்கையோடு இறைவனின் பாதத்தை சரணாகதி அடைவதின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும், தடங்கல்களையும், சிக்கல்களையும் சீர் செய்து நீங்கள் உன்னத நிலையை அடைய முடியும்.

மேலும் உங்களுக்கு ஏற்படுகின்ற இடர்களுக்கும், எதிர்காலத்தில் நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை கணித்து சொல்லக்கூடிய ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு ஏற்படுகின்ற சுப, அசுப பலன்களை அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு நடந்து கொள்ளலாம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று அதிக அளவு பயணங்கள் போகக்கூடிய சூழ்நிலை உள்ளது.நீங்கள் எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பு திட்டமிட்டு துவங்குவது மிகவும் முக்கியமானது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை என்று கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றி அடைய முடியும்.மேலும் கவனக் குறைவு பணியில் ஏற்படுவதால் சற்று கவனமாக இருந்து உங்கள் பணிகளை செய்து முடிக்கவும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் வந்து சேரும். மேலும் நீங்கள் குடும்பத்திற்காக இன்று பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

---- Advertisement ----

ஆரோக்கியத்தை பொறுத்தவரை முட்டிகளில் விறைப்பு தன்மை அல்லது வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சிறந்த உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று சிறந்த வாய்ப்புகளை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளலாம், எதிர்பாராத வகையில் உங்களுக்கு ஏற்படும் பணவரவு ஆச்சிரியத்தை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உருவாகும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கடின உழைப்பு காரணமாக எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களது முயற்சிக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை காப்பீடு போன்றவற்றில் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். பூர்வீக சொத்து வகையில் பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனினும் நிதி விஷயத்தை பொருத்தவரை கட்டுப்பாட்டோடு பணத்தைச் செலவு செய்வது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று சுறுசுறுப்பாக நீங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்களின் இனிமையான பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்திருப்பீர்கள். புதிய தகவல் தொடர்பின் மூலம் பல நல்ல விஷயங்கள் உங்களுக்கு வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகளை எளிதாக முடித்து விடுவீர்கள். உங்கள் பணியின் இயல்பை மேலும் விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பண புழக்கம் போதிய அளவு இருக்கும். உங்கள் கையில் இருக்கும் பணத்தை பார்த்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். பணத்தை முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று எந்த விதமான குறையும் இல்லை. உங்களது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் புனித யாத்திரை செல்லக்கூடிய வாய்ப்புக்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் நீங்கள் ஏழைகளுக்கு உணவை அளித்தல் போன்ற தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன்மூலம் அதிக அளவு நன்மைகளை பெறுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் உள்ளது. இதன்மூலம் உங்கள் பணிகளை தாமதமாக தான் உங்களால் செய்ய முடியும். எனவே பணியில் கவனத்தில் செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பண வரவை விட செலவு அதிகரித்து இருக்கும். எனவே பணத்தை சிக்கனமான முறையில் நீங்கள் கையாளுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று மிதமான நாள் என்று கூறலாம். உங்களுக்கு தோள் பகுதியில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அக்கறையோடு ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

சிம்மம்

சிம்மராசி நேயர்களே இன்று ஆன்மீக நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடுவதின் மூலம் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை நீங்கள் தள்ளிப் போடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளில் சிறந்த பயன்கள் உங்களுக்கு கிடைக்காது.மேலும் பணிகளில் செய்யும்போது கவனத்தோடு செய்வது மிகவும் அவசியமானது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கமும் சிறப்பாக இல்லை. அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கண்ணும் கருத்துமாக நீங்கள் இருப்பது அவசியம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டம் காரணமாக உங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். உடல் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடிய நாள்.மேலும் புதிய தொடர்புகள் மற்றும் புதிய நட்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ள உகந்த நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிகளை சிறப்பாக நீங்கள் செய்து முடிக்க முடியும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் உங்களுடைய காணப்படுகிறது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பயனுள்ள வகையில் செலவுகளை செய்வீர்கள். ஆன்மீக விஷயங்களுக்காக செலவு செய்வது உங்களுக்கு ஆறுதலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் என்று கூறலாம். உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்பதே என்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களுக்கு அதிகளவு பணிகள் இருக்கும்.நீங்கள் உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை பயன்படுத்த திட்டமிட்டு  பணிகளை செய்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி நிமித்தமாக நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க நீங்கள் திட்டமிடுங்கள். இதன் மூலம் எளிதாக பணிகள் முடிந்து விடும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சிறப்பாக நாள் என்பதால் உங்கள் தேவைகளை நீங்கள் எளிதில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு சிறிய கடன் வாங்கக்கூடிய அமைப்பும் இன்று உள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பான நாள் என்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பலன்கள் சாதகமாக அமைய வேண்டும் என்றால் அதற்காக நீங்கள் அதிக அளவு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சுப காரியங்கள் அனைத்தும் தள்ளிப் போகக்கூடிய நிலையில் தான் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை புதிய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். எனவே இருக்கும் பணியில் நீங்கள் கண்ணும் கருத்துமாக உங்கள் பணியை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். எனினும் பணிகளை தாமதமாக தான் செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் கிடையாது. தேவையற்ற செலவுகள் வந்து சேரும். இதன் மூலம் உங்களுக்கு கவலை ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தோலில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எண்ணெய் பதார்த்தங்களை உட்கொள்வதை நீங்கள் தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, இன்றைய நாள் நீங்கள் இசையை நல்ல முறையில் கேட்பீர்கள். தர்மம் செய்வது, ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது போன்றவை உங்களுக்கு மன திருப்தியையும், மன ஆறுதலையும் தரும். இதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்களுக்கு அவ்வளவு சிறப்பான காலகட்டம் என்று சொல்ல முடியாது. மேலும் குறைந்த அளவு பணியே இருப்பதால் உங்களுக்கு மன கவலை ஏற்படும். எந்த தொழிலை செய்தாலும் அது தாமதம் ஏற்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இல்லை. வரவும் செலவும் இருக்கும் மேலும் செலவுகள் அதிகமாகவதால் உங்களுக்கு கவலை ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நிலையில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியமானது. சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சரி விகித உணவை உங்கள் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று எதிர்பாராத அளவு நன்மைகள் உங்களுக்கு அதிகளவு வந்து சேரும்.மேலும் பயணத்தை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு எல்லாமே சிறப்பாக அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி சம்பந்தமான பயணம் உங்களுக்கு ஏற்படும். தொழில் செய்பவர்கள் மிதமான பலன்களை பெறுவார்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை இன்று வரவு காணப்படும்.மேலும் சேமிப்பதற்கான வாய்ப்புகள் இன்று குறைவாக இருப்பதால் இருக்கின்ற பணத்தை செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுமாரான நாள் என்று கூறலாம். உங்களுக்கு சளி மற்றும் தோள் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தகவல் தொடர்பின் மூலம் நல்ல நல்ல பலன்கள் வந்து சேரும். உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளதால் இந்த நாளை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிகளில் நேர்மையாக நீங்கள் இருப்பதோடு சக பணியாளர்களுடன் உங்களுக்கு சற்று சச்சரவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே வார்த்தைகளை பேசும்போது கவனமாக என்ன பேசுகிறோம் என்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை அதிக அளவு பண செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நிதியில் ஸ்திரத்தன்மைக்கான சேமிப்பது மிகவும் அவசியமாகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண் எரிச்சல், பல்வலி ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சாதகமாக பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால் சில விஷயங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். இதனால் உங்கள் பணிகளை நீங்கள் எளிதாக முடிக்கலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை மேற்கொள்ளும் போது கவனத்தோடு மேற்கொள்ளுங்கள். மேலும் பணிகளில் சிறப்பாக செயலாற்ற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் இல்லை. பணவரவு குறித்து எண்ணம் உங்களுக்கு மேலோங்கும். எனினும் பண இழப்பு ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்.

 ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.மேலும் அதிக கவலைகள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இரவில் தூக்கமின்மை ஏற்படாமல் இருக்க தூங்கவும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகமாகும்.

---- Advertisement ----