இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை. ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட பலன்களை முன்பே தெரிந்து கொள்வதின் மூலம் எதையும் திட்டமிட்டு நமக்கு ஏற்றவாறு செய்து கொள்ள முடியும். மேலும் நமக்கு ஏற்படுகின்ற அசுப பலன்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அதற்குரிய பரிகாரங்களை செய்வதின் மூலம் அவற்றிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.

ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கக் கூடிய பலாபலன்களை அனுசரித்து நாம் திட்டமிடுவது நன்மையை தரும்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, இன்று உங்கள் மனதை கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அதிலிருந்து நீங்கள் விடுபட்டு வெளியே வருவதின் மூலம் நன்மைகளை அடையலாம்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு திருப்தி இருக்காது. மேலும் பணி சூழல் சிறப்பாக இல்லை.எனவே பணிகளை செய்யும்போது கவனம் தேவை.

நிதி நிலைமையை பொறுத்தவரை குறைந்த அளவு பணப்புழக்கம் காணப்படும். உங்களுக்கு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அந்த அளவு பணம் உங்கள் கையில் இருக்காது.

---- Advertisement ----

ஆரோக்கியத்தை பொருத்தவரை மன அழுத்தத்தின் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே நீங்கள் என்றும் மகிழ்ச்சியோடும் ஆற்றலோடும் இருப்பீர்கள். இன்று உங்களுக்கு சில அசவுரியங்கள் ஏற்படலாம். எனவே நீங்கள் திருப்தி அடைவது சற்று கடினமாக இருக்கும்.மேலும் அமைதியாக இருப்பதின் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள் பணியை சிறப்பாக செய்ய முடியாத அளவு சில சூழ்நிலைகள் உருவாகும். திறமையாக பணியாற்ற வேண்டும் என்றால் பணிகளை திட்டமிட்டு நீங்கள் செய்ய வேண்டும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை என்று உங்களுக்கு பணவரவு அதிக அளவு இல்லை. பணத்தை கவனமாக கையாள வேண்டும். மன அமைதியை கெடுக்கக்கூடிய வகையில் சில நிகழ்வுகள் நடக்கலாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி மற்றும் இருமல் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சீரான, சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நீங்கள் நினைத்தபடி நிறைவேறும். எனவே இந்த நாளை உங்களது நாளாக நீங்கள் மாற்றலாம்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் திறமைகளை பார்த்து மேலதிகாரிகள்  வியப்பதோடு பாராட்டவும் செய்வார்கள்.மேலும் மேலதிகாரிகள் உங்கள் பணிகளை பார்த்து உங்களை பாராட்டும் போது உங்களது மகிழ்ச்சி அதிகரிக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று மிக நல்ல தினம் என்று கூறலாம். உங்கள் கையில் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கும்.எனவே பயனுள்ள வகையில் உங்கள் பணத்தை செலவு செய்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நல்ல தைரியத்தோடு இருக்கும் உங்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தவிதமான சீர்கேடும் ஏற்படாது.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று உங்கள் எதிர்காலம் பற்றிய கனவினை நீங்கள் காண்பீர்கள். எதிர்காலத்தைப் பற்றி சில சிந்தனைகள் உங்களுடைய அதிகரித்து காணப்படும். எனவே நீங்கள் சில முக்கிய நோக்கங்களை பற்றி இன்று மற்றவர்களோடு பேசுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை மகிழ்ச்சி நிறைந்த நாளாக உள்ளது. பணியில் உங்களுக்கு ஆதாயம் அதிக அளவு கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்கு திருப்தி ஏற்படும். மேலும் உங்களுக்கு உரிய அங்கீகாரம் தக்க சமயத்தில் கிடைக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு அதிக அளவு பணம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவு பணம் உங்களிடம் இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கும். உங்களது ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. வலிமை நிறைந்திருக்கும் உங்களிடம் திடமான ஆரோக்கியமும் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே என்று மந்தமான சூழ்நிலை நிலவும். தேவையற்ற விஷயங்களை செய்யும் போது மிகவும் விழிப்போடு இருப்பது அவசியமாகும். இந்த நாளை கவனமாக நீங்கள் கையாளுவது அவசியமாகும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை கையாளுவது சற்று கடினமாக இருக்கும். பணிகளில் தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் நீங்கள் தொழிலில் கவனத்தை செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

நிதி நிலைமையை பொருத்தவரை பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே பணத்தை செலவு செய்யும்போது சிக்கனமாக இருக்கவும். மேலும் பணத்தை கையாளும்போது கவனத்தோடு இருப்பது அவசியமாகும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இன்றைய தினம் நீங்கள் தியானம் மூலம் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசியின் நண்பர்களே இன்று மன அழுத்தம் காரணமாக நீங்கள் சில சௌரியங்களை இழந்து விடுவீர்கள். மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது நல்லது. குறிப்பாக திரைப்படங்கள் பார்ப்பது பாடல்கள் கேட்பது போன்றவற்றில் உங்கள் மனதை செலுத்துவதின் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை வேலைகள் பெருகி காணப்படும். பணிகளை திட்டமிட்டு முடிப்பது கட்டாயமாக இருக்கும். எனவே தொழிலில் கவனத்தை செலுத்த வேண்டும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு தேவையான பணத்தை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.மேலும் பணத்தை பொருத்தவரை இன்று அதிர்ஷ்ட வாய்ப்பு கிடையாது .எனவே இருக்கின்ற பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் உங்கள் மனநிலையை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ளுங்கள். இறைவழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுடைய அன்றாட பணிகளை செய்வதில் கூட உங்களுக்கு தாமதம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். எனினும்  அதிர்ஷ்டத்தின் காரணமாக உங்கள் பணிகளை விரைவாக முடிக்க கூடிய அமைப்பு உள்ளது. உங்கள் முகத்தில் காணப்படும் உற்சாகம் பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் பணி திறமையை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள். புதிய பணி ஒப்பந்தங்கள் வந்து சேர்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

நிதி நிலைமை பொறுத்த வரை இன்று  இருக்கும் பணமானது போதுமான அளவு இருக்கும். இந்த பணத்தை சேமிக்க பல வழிகளில் முயற்சி செய்வீர்கள். இந்த முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தரும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் மகிழ்ச்சியோடு இருக்கும் உங்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்கள் வளர்ச்சி அபாரமாக இருக்கும். எதையும் பரந்த நோக்கத்தோடு பார்ப்பீர்கள். நீங்கள் சந்திக்கும் தடைகளை தகர்த்து எறிந்து உற்சாகமாக இருக்கக்கூடிய நாளாக இந்த நாள் விளங்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அக்கறையோடு பணியாற்றி பல சாதனைகள் புரிவீர்கள். உங்கள் பணிகளை விரைந்து முடிப்பதின் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும்.

எனவே தொழில் ஸ்தானம் திருப்திகரமாக இருக்கும்.

நிதி நிலைமை பொறுத்த வரை பண வரவும் அதிகரித்து இருக்கும். உங்கள் வங்கி இருப்பை நன்கு பராமரிக்க இன்று உகந்தநாள் என்று கூறலாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆற்றலோடு இன்று இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான சுணக்கமும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நீங்கள் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்வதின் மூலம் இந்த நாள் சிறப்பான நாளாக அமையும். புதிய மனிதர்களோடு கலந்துரையாடுவீர்கள். மேலும் புதிய நண்பர்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். மேலும் பணி சுமை உங்களுக்கு அதிகரித்து இருக்கும். எனினும் நீங்கள் சாமர்த்தியமாக உங்கள் பணியை செய்வதில் உங்களது திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவுக்கான அதிர்ஷ்டம் குறைவாகவே இருக்கும். எனவே இருக்கின்ற பணத்தை சிறப்பான முறையில் செலவு செய்ய முயற்சி செய்யவும்.

ஆரோக்கியத்தை பொறுத்த வரை இன்று மன அழுத்தத்தின் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் உங்களுக்கு தூக்கம் இன்மை ஏற்படும். எனவே ஆன்மீகத்தில் நீங்கள் உங்கள் மனதை செலுத்துவதின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று தேவையற்ற கவலையின் காரணமாக நீங்கள் உங்களுடைய சௌவுரியங்களை இழந்து விடுவீர்கள். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இன்று எந்த செயலையும் செய்யும்போது பலமுறை யோசித்து செய்வது அவசியம் ஆகும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து இருப்பதால் கவலை ஏற்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு காண புழக்கம் இல்லை. வரவும், செலவும் இணைந்து இருக்கும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தி தரும். எனவே சிக்கனமாக இருப்பது நல்லது.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை நன்மை தரும் விஷயங்களை மட்டும் நீங்கள் நினைத்தால் போதும். மனதில் வேறு எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு குழப்பினால் ஆரோக்கியம் சீர் கேடு அடையும். எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று மிகவும் சிறப்பான நாளாக உங்களுக்கு உள்ளது. பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை மும்மரமாக செய்வீர்கள். பணி நிமித்தமாக உங்களுக்கு பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தால் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை சில தடைகளை கடந்த பின் உங்களுக்கு பணம் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இன்று உள்ளது.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நாள் என்று சொல்லலாம். குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தவிர்த்தால் போதும் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்றைய நாளில் நீங்கள் கவலையோடு இருப்பீர்கள். ஆனால் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் நன்மை பெறலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் இறுக்கமாக இருப்பதால் சிறப்புடன் பணியாற்ற சமயோஜித புத்தியோடு செயல்படுங்கள். இதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சேமிப்பதற்கு குறைந்த அளவே பணம் இருக்கு.ம் இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்த தரும். எனவே சிக்கனமாக பணத்தை செலவு செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் தியானம் மேற்கொள்வதின் மூலம் எந்த தலைவலியை குறைத்துக் கொள்ளலாம்.

---- Advertisement ----