"பேட்ட" சிங்கிள் ட்ராக் - கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள் - என்ன காரணம்..?


ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று மாலை வெளியானது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த மரண மாஸ் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இருந்தாலும் விஜய் ரசிகர்களிடம் இருந்து வசைபாடுகளை தான் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் வாங்கி வருகிறார்.

ஏனென்றால் இவரது எழுத்தில் வந்த சர்காரின் ஓபனிங் பாடலான சிம்ட்டாங்காரன் நன்கு பிரபலமானாலும் வரிகளை பொருத்த வரை ரசிகர்களிடம் நெகட்டிவ் கமென்ட்ஸ்களையே பெற்றது.

இது தான் தளபதி ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாம்.