நடிகர் ராதாரவி ஒரு படவிழாவில் மேடையில் நடிகை நயன்தாரா மற்றும் பெண்கள்
பற்றி பேசியது பெரிய சர்ச்சையானது. அதன் பிறகு அவருக்கு பிரபலங்கள் பலரும்
கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது பற்றி நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசியுள்ளார்.
"நடிகர் ராதாரவி
பேசிய வார்த்தைகள் தவறு என தற்போது வரை அவர் உணராமல் உள்ளார். ஒரே ஒரு
படத்தை பார்த்து யாரும் திருந்திவிடப்போவதில்லை. இருந்தாலும் நேர்கொண்ட
பார்வை நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியே தீரும். பெண்களை இப்படி ரேப் ஜோக்
செய்து கேலியாக பேசக்கூடாது என் யோசிக்கவைக்கும்" என அவர் கூறியுள்ளார்.



