திரிஷாவின் அம்மா வெளியிட்ட தகவல் - அதிர்ந்து போன ரசிகர்கள்.! - என்ன ஆச்சு..?

நடிகை திரிஷா எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கண்ணியாக தான் இருக்கின்றார். 96 படம் அவருக்கு பெரிது கை கொடுத்தது. பல விருதுகள் அவருக்கு இப்படத்தால் கிடைத்திருக்கிறது.

பேட்ட படத்திற்கு பிறகு அவர் தற்போது ராங்கி படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது திரிஷாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல தகவல்கள் அவரின் உடல் நிலை பற்றி பரவியுள்ளது. இந்நிலையில் தற்போது திரிஷா பரிபூரணமாக குணமாகிவிட்டார், தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என அவரின் அம்மா உமா கூறியுள்ளார்.