திரையுலகில் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்தால்தான்
பிரபலமாக முடியும், செய்திகளில் அடிபடி முடியும் என பல சினிமா பிரபலங்கள்
நினைக்கிறார்கள் போலிருக்கிறது, குறிப்பாக நடிகைகள்.
'என்ஜிகே'
படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் காதலைப் பற்றிய ஒரு
கேள்விக்கு அதிர்ச்சிகரமான பதிலை அளித்திருக்கிறார். “காதலில்
விழுவதற்காகக் காத்திருக்கிறேன். வயதானவரோ, இளைஞரோ அது பற்றி கவலை இல்லை,”
என்று கூறியிருக்கிறார் ரகுல்.
ஏற்கெனவே, சில நடிகர்களுடன் காதல்
சர்ச்சையில் அடிபட்டவர்தான் ரகுல். இப்போது காதலைப் பற்றி அவர் கூறியுள்ள
பதில் நிச்சயம் அதிர்ச்சியான ஒன்றுதான். வயது வித்தியாசம் அதிகமாக
இருப்பவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது இப்போது சர்வ சாதாரணமாகி
வருகிறது.


