அப்படி என்றால் கவர்ச்சியாக நடிக்க தயார்..! - நடிகை மஞ்சிமா மோகன் - எப்படி..??


இப்படை வெல்லும் படத்துக்கு பின், தமிழ் சினிமாவிலிருந்து திடீரென மாயமானார், மஞ்சிமா மோகன். விசாரித்தபோது, மலையாளம், தெலுங்கு படங்களில், மேடம், பிசியாகி விட்டது தெரிய வந்தது.

அதிலும், தெலுங்கில், என்.டி.ஆர்., வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், அவரது மகள் புவனேஸ்வரியாக, மஞ்சிமா நடித்தது, அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், தமிழை விட, தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த இடைவெளியில், சிறிது அவகாசம் கிடைத்தபோது, தேவராட்டம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள இந்த படத்தில், ஹீரோவாக, கவுதம் கார்த்திக் நடித்துள்ளார். அடுத்ததாக, ஜீவா ஜோடியாக ஒரு படத்திலும், தெலுங்கில் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம், மஞ்சிமா. மேலும்,நல்ல கதை மற்றும் முன்னணி ஹீரோ படம் என்றால் கவர்ச்சி காட்டவும் தயார் என்ற நிலையில் இருக்கிறாராம் மஞ்சிமா.