நடிப்பு, வசனம், மேடை நாடகம் என ஆல்ரவுண்டராக வளம் வந்து கொண்டிருந்தவர் கிரேஸி மோகன். இவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவரது இறுதிசடங்கில் கலந்துகொண்ட வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய விஷயம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது, இன்று காலை 10 மணிக்கு குடும்பத்தினருடன் நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருந்த அவருக்கு சரியாக 10:30 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள்.
மரணம் கூட அவருக்கு நிம்மதியாக வந்திருக்கின்றது என்றும் கிரேஸி மோகன் மரணத்தால் ஆசிர்வாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார் வைரமுத்து.


