வழக்கத்திற்கு மாறாக நடக்கும் எந்த செயலும் நம்முடைய கவனத்தை ஈர்க்கும். காரணம், அதனை நாம் முன்பு எப்போதும் கண்டிருக்க மாட்டோம். உதாரணமாக சாலையில் செல்கிறோம் எத்தனையோ வாகனங்கள் நம்மை கடந்து செல்லும்.
ஆனால், வித்தியாசமாக ஏதாவதொரு வாகனம் வந்தால் வச்ச கண்ணு வாங்காமல் அந்த வாகனத்தை வெறிக்க வெறிக்க பாப்போம். பிரமிப்போம். பொதுவாக லாரிகளுக்கு 6 வீல்கள் தான். அதே சாலையில், 60 சக்கரங்களுடன் ஒரு லாரி வந்தால் நமக்கு வியப்பாக இருக்கும். இப்படி பல இடங்களில் பல வியப்பான விஷயங்கள் நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆனால், அவற்றில் வெகுசில காட்சிகள் மட்டுமே கேமராவில் பதிவாகி உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களை ஆச்சரிப்படுதுகின்றது. அந்த வகையில் இன்று நாம் தேர்வு செய்துள்ள சில ஆச்சரியமான புகைப்படங்களை நாம் இப்போது பாப்போம்.
1. நார்வே நாட்டில் ஒரு இடத்தில் சிறிதுநேரம் ஏற்பட்ட பூமியின் காந்தவிசை இழப்பு அங்கிருக்கும் காற்றை சூரியவழிமண்டலம் நோக்கி தள்ளும் பிரம்மிப்பான காட்சி.
2.பொதுவாக வானத்திலிருந்து பூமி நோக்கி தான் மின்னல் அடிக்கும். இது சற்று வித்திதியாசமனது பூமியில் இருந்து வானம் நோக்கி ஒரு மரம் போல அடித்த மின்னல். இதனை "ground-to-cloud lightning" என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.
3.இனி விமானத்தில் ஜன்னல் ஓர சீட்டை புக் செய்வீர்களா..?
4.கடல் ஓரத்தில் இருக்கும் எரிமலை வெடித்து ஒரு பந்து போல மேலே வரும் இந்த லாவா குழம்பை பார்த்து எதோ போட்டோ ஷாப் என்று நினைந்து விடாதீர்கள். இது உண்மை.
Dome fountain of episode 10, October 10–13, 1969, eruption of Kilauea Volcano. This dome fountain is about 20 m (65 ft) high. Symmetrical dome fountains such as this are rare. #Tbt #HI @Volcanoes_NPS pic.twitter.com/sKSQaVINKs— USGS (@USGS) March 29, 2018
5. எவன்டா அது கண்ணாடிய கொண்டு வந்து கடல்-ல கொட்டினது..? - உண்மையில் இது நீர்பரப்பின் மீது படர்ந்த பனிக்கட்டி உடைந்து கரை ஒதுங்கியுள்ளது.
6. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல. இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் தோன்றி கண்ணை கவரும் காட்சி.
7.காரின் விண்ட ஷீல்டு மீது படர்ந்த பணியை பாயை போல சுருட்டிவிட்டார் நம்மாளு ஒருவர்..!
8.அவதார் படத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ..? இல்லை, தூய்மையான நீர் கொண்ட ஒரு ஏரியை பனி மூடியுள்ளது அவ்வளவுதான்.
9.Bioluminescent என்ற ஒரு ஒளிரும் வகை உயிரினத்தின் வேலை தான் இந்த கண்கொள்ளா காட்சி.
10.காட்டுக்குள்ளே சுறா பறக்குது என்றால் தவறு. கடலுக்குள்ளே ஒரு காடு என்பது தான் சரி.
11. வட்னாஜோகல் என்ற தீவில் உள்ள பாறைகள் சூரிய ஒளியை பகலில் உள் இழுத்து இரவில் நீல நிறத்தில் ஒளிரும்.
12. மின்னலும், வானவில்லும் ரொமான்ஸ் செய்த போது
14. நூலை கட்டி ஊரை தூக்குறாங்களே..! - மிக நேரத்தில் இருந்து எடுக்கபட்ட மழை பெய்யும் பகுதி..!
16.உறைந்த அலையை பார்த்திருக்கிறீர்களா..? - இந்தா பாருங்கோ..!
17.டேன் டேலியன் என்ற பூவை பனி ஆக்கிரமித்துள்ள காட்சி..!
18. ரெயின்போ யூகலிப்டஸ் மரம் - பெயின்டிங் செய்யவில்லை. இயற்கையாகவே இந்த மரம் பல வண்ணங்களை கொண்டது. இதனை மேலை நாட்டினர் மகிழ்ச்சியான மரம் என்று கூறுகிறார்கள்.
19. வட்ட வடிவ வானவில் - காண்பது அரிது








