கல்லூரி மாணவர்கள் செய்யும்அலப்பறைகளுக்கு இது தான் அளவு என்று இல்லாமல் போய்க்கொண்டிருகின்றது. மாஸ் என்று நினைத்து கொண்டு சிறு வண்டுகள் செய்யும் காரியத்தால் அவர்களுடைய உயிருக்கு அவர்களே உலை வைத்துக்கொள்கிறார்கள்.
கடந்த வருடம் லோக்கல் ட்ரெய்னில் வீச்சு, கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை படிக்கட்டில் தொங்கி கொண்டு தரையில் தேய்த்துக்கொண்டு பயணிகளை அச்சுறுத்தினர்.
கொஞ்சம் ஸ்லிப் ஆகியிருந்தால் அவர்களை புதைத்த இடத்தில் இந்நேரம் மரம் வளர்ந்திருக்கும்.
இந்த வருடம், ட்ரெய்னை விட்டு விட்டு பேருந்து. ஆம், பஸ் டே என்ற பெயரில் சில பதறுகள் பேருந்து மீது ஏறி பயணம் செய்ததும் ட்ரைவர் ப்ரேக் போட்டவுடன் சீட்டுக்கட்டு போல கீழே சரிந்து விழுந்ததையும் நேற்று பார்த்திருப்பீர்கள்.
ஒரு வேளை, ட்ரைவர் அதிர்ச்சியில் பிரேக்கில் இருந்து காலை எடுத்திருந்தால் பேருந்தின் சக்காரம் அந்த பதருகளின் மீது ஏறி தலையை நசுக்கி உயிரை குடித்திருக்கும்.
இந்நிலையில், நடிகர் விவேக் இந்த நிகழ்வை மீம் போட்டு வேறலெவலில் கலாய்த்துள்ளார். அதனை நீங்களே பாருங்க...