இன்று காலை முதல் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகின்றது. சங்க உறுப்பினர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் தர்பார் ஷூட்டிங்கில் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது.
தபால் ஒட்டு போடுவதற்குண்டான கடிதமும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் தான் ரஜினி கைக்கு கிடைத்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்து கொண்டார் நடிகர் ரஜினி.
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் ரஜினிக்கு கடுமையான பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ரஜினி அவர்களே நீங்கள் மட்டும் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் இல்லை.

