தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான "வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன்" என்ற படத்தில் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.
இந்த படத்தை தவிர்த்து, தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நடிகை ராதிகாவின் "வாணி ராணி" மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்த "வம்சம்" உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
திருமணமாகாத இவரை பற்றிய கிசுகிசுக்கள் அடிக்கடி வெளியாகிய வண்ணம் உள்ளன. அதில், மிக முக்கியமான ஒன்று காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இவர் காதலில் இருக்கிறார் என்பது தான்.
இந்த கிசுகிசுவை பற்றி ரேஷ்மா கூறுகையில், இதுபற்றிய நிறைய தகவல்களை நானும் பார்த்தேன்.
என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் அதை எனக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் மீடியாவில் வைரலானதால் அதற்கு மறுப்பு அப்போதே தெரிவித்த்ருந்தேன்.
இதனால் யோகிபாபுவுடன் அடுத்து படத்தில் சேர்ந்து நடிக்கலாம் என தோன்றியது. அதற்கான வாய்ப்பும் இப்போது வந்துள்ளது. கூடிய விரைவில் இணைந்து நடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், இது இப்போதைக்கு வேண்டுமனால் கிசுகிசுவாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என மெல்லிய சிரிப்புடன் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளார்.


