பொதுவாக நடிகைகள் பலரும் ஃபிட்னஸ் ஃப்ரீக்குகள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தால் சினிமாவில் பொழைக்க முடியும். எடை கூடினாலும் ஆபத்து. எடை குறைந்தாலும் ஆபத்து. எப்படி இருக்கிறோமோ அப்படியே இருக்க வேண்டும்.
அவர்களது உடலில் எப்போதும் கிள்ளி எடுக்கச் சதை இருக்காது. அத்தனை ஃபிட்டாக உடலைப் மெயின்டெய்ன் செய்வார்கள். பிறகு, திருமணம் முடிந்த பிறகோ அல்லது நடிப்பை நிறுத்திய பிறகோ பொத பொதவென உப்பிவிடுவார்கள்.
நடிகைகள் தீபிகா படுகோனே முதல் கரீனா கபூர் தொடங்கி அலியா பட், ஏன் நம்மூர் ஷ்ருதி ஹாசன், தமன்னா வரை அவர்கள் உடலைப் பேணும் முறையே தனி.
ஃபிட்னஸில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலோ அல்லது போர் அடித்தாலோ உடனே இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக ஊடகங்களில் தங்களது வொர்க் அவுட் விடியோக்களைப் பதிவேற்றி, அந்த விடியோக்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பில் உற்சாகமாகி மீண்டும் தொடர்ந்து ஃபிட்னஸ் குயின்கள் ஆகிவிடுவார்கள்.
தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலரும் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் ஃபிட்னஸ் வீடியோக்களைப் பெருமையாகப் பகிரக்கூடியவர்கள் தான்.
இப்போது இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் டெலிவிஷன் நடிகையான மெளனி ராய். நாகினி பார்ட் 1 மற்றும் பார்ட் 2 வில் நாகினியாக வந்து அசத்திய இந்தப் பெண்ணுக்கெனத் தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அவர்களை திருப்திபடுத்த அடிக்கடி தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஹாட்டான யோகா வீடியோ வைரலாகி வருகின்றது. இதற்கு பெயர் மயூராசனமாம்.
இதோ வீடியோ,
இதோ வீடியோ,



