தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் மிகவும் பண்பானவர்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் மிகவும் எளிமையானவர்கள் எனப் பெயரெடுத்தவர்கள்.
சமீபத்தில் இளையதளபதி நடிகை விஜய்யைப் பற்றி அவருடன் விளம்பரப் படத்தில் நடித்த காத்ரினா கைப் சொன்னது அவரது ரசிகர்களால் வெகுவாக சிலாகிக்கப்பட்டு வைரலானது.
அதே போல தற்போது அஜித்தைப் பற்றி வித்யாபாலன் குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகிறது. 'நேர் கொண்ட பார்வை' படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து முடித்துள்ளார் வித்யா பாலன்.
படப்பிடிப்பில் இருவரும் இருக்கும் போது, அஜித் அவருடைய படப்பிடிப்பு முடிவடைந்தாலும் வீட்டுக்கு கிளம்ப மாட்டாராம். வித்யா பாலன் படப்பிடிப்பு முடியும் வரை தளத்திலேயே காத்திருப்பாராம். வித்யா பாலன் கார் கிளம்பியதும்தான், அஜித்தும் அந்த இடத்தை விட்டு கிளம்புவாராம். அஜித்தின் இப்படிப்பட்ட பண்பு வித்யா பாலனை மிகவும் நெகிழ வைத்துள்ளது.
தங்களுடன் நடிப்பவர்கள் மீது எவ்வளவு கனிவுடன் தமிழ் நடிகர்கள் இருக்கிறார்கள். அஜித்தின் இந்த பண்பை இதுவரை யாரிடமும் நான் பார்த்ததில்லை என வித்யாபாலன் ஆச்சரியப்பட்டுள்ளார்.