சமீப காலமாக தொலைகாட்சி சீரியல்களும் திரைப்படங்கள் அளவுக்கு இளைஞர்களால் விரும்பி பார்க்கப்படுகின்றது.சில தொலைகாட்சி சேனல்களுக்கு சீரியல்கள் தான் முதன்மையான வருமான வாய்ப்பாக இருந்து வருகின்றது.
அந்த வகையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையான சித்ரா தமிழ் சீரியல்களில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, தமிழ் சீரியல்களில் நடிக்க தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு மறுக்கபடுகின்றது. வெள்ளையாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக வடநாட்டு பெண்களையே அதிகம் நடிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு தான் முதல் வாய்ப்பு.
நான் ஒன்றும் அவ்வளவு வெள்ளை கிடையாது. டஸ்கி கலர் தான்.ஆனால், எதற்காக, வெள்ளையாக இருக்கும் பெண்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று தனது ஆதங்கத்தை போட்டு உடைத்துள்ளார்.


