தோனியின் நாட்டுப்பற்று - சின்னத்தை நீக்க ICC அறிவுறுத்தல் - ரசிகர்கள் அதிர்ச்சி


ராணுவ முத்திரையை, தனது கீப்பிங் கிளவ்சில் பதித்துள்ள தோனி, அதனை அகற்ற வேண்டும் என ஐசிசி அறிவுறுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஆடிய உலக கோப்பை கிரிக்கெட் முதல் லீக் போட்டியில், இந்திய துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரையான 'பாலிதான்' முத்திரை பதித்த கையுறையை அணிந்து விளையாடினார். 

இம்முத்திரைக்கு 'தியாகம்' என்பது பொருள். இதுகுறித்த விவரம் வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களில் தோனிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில் தோனியின் கையுறையில் உள்ள ராணுவ முத்திரையை அகற்றும்படி, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ.,க்கு ஐசிசி அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்சிகுள்ளாக்கியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு தோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு துணை ராணுவ பிரிவில் அவர் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் அந்த குறியீட்டை பயன்படுத்தும் முழு தகுதி தோனிக்கு உள்ளது. அடுத்த போட்டியில் என்னசெய்யப்போகிறார் என்று பார்ப்போம்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--