ஜெயம் ராஜா என்று அரியப்பட்டு வந்த இயக்குனர் தனிஒருவன் வெற்றிக்கு பின்னால் அவர் இயக்குனர் ராஜா ஆனார். வேலைக்காரன் படத்திற்கு பின்னால் மீண்டும் அவர் நடிகர் விஜய்யுடன் இணைவதாக செய்திகள் வந்தன.
இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமனார்கள். ஆனால் திடீரென அட்லியுடன் விஜய் இணைந்து விஜய் படம் செய்வதாக மாறிய செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சமீபத்தில், விஜய் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள மோகன் ராஜா, ''கண்டிப்பாக நான் விஜய் சாருடன் இணைந்து படம் செய்வேன். அவர் என்னிடம் கதை கேட்டுக்கொண்டே இருக்கிறார். நான் தான் தனி ஒருவன் 2 முடித்தவுடன் உங்கள் படம் செய்கிறேன் எனச் சொன்னேன். தனி ஒருவன் முடித்தவுடன் விஜய் சார் படம் தான்'' எனக் கூறியுள்ளார்.
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 64வது படத்தில் நடிப்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம். இந்நிலையில், இயக்குனர் ராஜாவின் தம்பியும் நடிகருமான ஜெயம் ரவி தான் நடித்துள்ள கோமாளி பட புரொமோஷனில் கலந்துகொண்ட ஜெயம் ஒரு பேட்டியில், விஜய்-மோகன் ராஜா இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
சரியான படத்திற்காக
காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கான பேச்சு வார்த்தை நடக்கிறது என்று
கூறியுள்ளார். இந்த விஷயம் விஜய் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பத்து வருடங்களுக்கு பிறகு வேலாயுதம் கூட்டணியை மீண்டும் தளபதி 65-யில் எதிர்பார்க்கலாம் என்றே தெரிகின்றது.