17 வயதில் நடிக்க வந்த நடிகை ரேணுகா மேனன் - என்ன ஆனார்..? - இப்போது என்ன செய்கிறார்..? -புகைப்படங்கள் உள்ளே


ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.நம்மள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான ரேணுகா 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான "கலாபக் காதலன்" திரைப்படத்தில் ரேணுகா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 


இதன் கரு சகோதரியின் கணவனை விரும்பும் பெண்ணைப் பற்றியது என்பதால் வயதுவந்தோர் பிரிவுக்குள் வைக்கப்பட்டது.ரேணுகா மேனன், தமிழ் திரை உலகில் பிப்ரவரி-14 மற்றும் கலாப காதலன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் அறியப்பட்ட நடிகையானார்பெரும்பாலும் நடிகைகள் அனைவருமே 30 வயதுக்கு மேலே தான் திருமணம் செய்து கொள்வது வழக்கம்.


ஆனால் ரேணுகா மேனன் 19 வயதிலேயே சூரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.திரை உலகில் நல்ல வாய்ப்பு இருக்கவே, திருமணம் செய்து கொண்ட கதாநாயகிகளில் இவரும் ஒருவர். இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

நடனம் மற்றும் ஓவியம் வரைவதில் திறமை வாய்ந்த இவர் அமெரிக்காவில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறாராம்.இந்நிலையில் தற்போது இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாக ஆரம்பித்துவிட்டத.