சூப்பர் ஹீரோவாக மாறிய ராகவா லாரன்ஸ்..! 3D-யில் பிரமாண்ட பட்ஜெட் படம்..!


பேய் படங்களில் நடித்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், அடுத்து சூப்பர் ஹீரோவாக களமிறங்குகிறார். 


காஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படம் பண்ணுகிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் லாரன்ஸ், ஹாலிவுட் பாணியில் ஸ்பைடர் மேன், அயர்ன் மென் போன்ற ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


படத்தில் யார் நடிக்கபோகிறார்கள், இயக்குநர் யார் என்ற விபரம் வெளியாகவில்லை. விரைவில் அனைத்து தகவல்களையும் படக்குழு வெளியிட உள்ளனர். 

தமிழ் ஹீரோ ஒருவர் முதன் முறையாக சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ள இந்த தகவல் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.