தளபதி 64 படத்தில் நடிக்கிறீர்களா..? - விஜய்க்கு என்ன தகுதி இருக்கு..? - நடிகை ராஷ்மிகா மந்தண்ணா..!


நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் "பிகில்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது. முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுதும் சென்னையிலேயே நடந்தது. 


இந்நிலையில், விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 பற்றி சில செய்திகள் வெளியாகி வைரலாகி வந்தன. அதில் முக்கியமான ஒன்று இப்படத்தில் நடிகை ராஷ்மிகா நடிக்கிறார் என்பது தான். 

இதுகுறித்து ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் கேட்டபோது, பாக்கலாம் என்று கூறிவிட்டு மற்றபடி எதுவும் கூற முடியாது என்றார். பின் விஜய்க்கு நடிப்பை தாண்டி என்ன தகுதி உள்ளது என்று கேட்டபோது, பெர்சனாலிடி டெவலப் செய்வது குறித்து பயிற்சி கொடுக்கும் திறமை உள்ளது என்று கூறியுள்ளார்.