சரவணபவன் தமிழ் நாட்டின் மிகப்பெரிய சாம்ராஜ்யம். அதனை உருவாக்கியவர் தான் இந்த அண்ணாச்சி ராஜகோபால். மிகத்தீவிரமான முருகபக்தர். ஜோதிடத்தில் அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர்.
ஆனால், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஜோதிடத்தின் தவறான வழிகாட்டுதலினால் சருக்கியவர் அப்போதிலிருந்து கோர்ட், கேஸ் என்று நிம்மதியில்லாத வாழ்கையை தான் வாழ்ந்து கொண்டிருந்தார்.
அவர் செய்த தவறு அவருக்கு சிறை தண்டனையும் பெற்று தந்தது. ஆனால், ஆயிரக்கணக்கோருக்கு வேலையையும், லட்சக்கணக்கானோரின் பசியையும் ஆற்றியவர் இந்த ராஜ கோபால்.
தமிழகம் முழுதும் தனது சாம்ராஜ்யத்தை பரப்பிய இவரது மறைவை பலரும் ஏளனம் செய்தனர். காரணம், இடைப்பட்ட காலத்தில் அவர் செய்த ஒரே ஒரு தவறு மட்டுமே. இந்நிலையில். தான் இறக்கப்போவதை உணர்ந்து கொண்ட ராஜகோபால் தன்னுடைய கடைசி ஆசையை தன்னுடைய உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தன் குடும்பத்தினர் மூலம் தெரிவித்தார்.
அப்படி என்ன ஆசையாம் இவருக்கு என்று தான் பலரும் கேட்பீர்கள். ஆனால், அவர் கேட்டது, நான் இறந்தாலும் கடைகளை மூடக்கூடாது. பசி என்று நம் உணவகத்தை எட்டிப்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்து விட கூடாது. அதனால், அனைத்து கடைகளையும் நான் இறந்துவிட்டாலும் திறந்தே வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வாழ்கையை கொடுத்த அண்ணாச்சியின் ஆசையை கனத்தை இதயத்துடன் நிறைவேற்றியுள்ளனர் சரவணபவன் ஊழியர்கள். இரவு 9 மணி வரை கடையை திறந்து வைத்து மக்களின் பசியாற்றியுள்ளனர்.
கடந்த 18 ஆண்டுகளாக நிம்மதியில்லாத வாழ்கையை வாழ்ந்து ஆயுள் தண்டனை கைதியாக இறந்து போன இவரது வாழ்கை பல பாடங்களை நமக்கு கற்றுக்கொடுத்திருகிறது. எவ்வளவு உயரம் சென்றாலும், ஒழுக்கம் மறவாமல், எந்த விஷயத்தையும் ஆராயாமல் முடிவு எடுக்க கூடாது. வாழ்க்கையில் சறுக்கினாலும், தான் செய்யும் தொழிலை எந்த நிலையிலும் சறுக்கிவிட அனுமதிக்க கூடாது என்பதை வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார் அண்ணாச்சி ராஜகோபால்.


