விஜய் ஹீரோ என்றால், இவர் தான் ஹீரோயின் - பிரபல நடிகை அதிரடி பதில்


பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார் விஜய். 

நடிகர்கள், தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றவர்களை தொடர்ந்து இப்போது விஜய்யும் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு நடிக்கவுள்ளார். 


தளபதி 64 என தற்காலிகமான தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா என்று கூறுகிறார்கள். 


இது குறித்து அவரிடம் கேட்டால், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், அவரிடம், ஒரு வேளை நீங்கள் ஒரு படத்தை தயாரித்தால் அந்த படத்தில் யார் ஹீரோ , ஹீரோயினாக தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதற்கு, விஜய் மற்றும் சமந்தா என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.