தங்கள் சமூக வலைதள பக்கத்தில் ஒரு போஸ்ட் போட ப்ரியங்கா சோப்ரா மற்றும் கோலி வாங்கும் சம்பளம்..!


அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதல் திருமணம் செய்துள்ள இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். பிரியங்கா சோப்ரா தனது 37-வது பிறந்த நாளை கணவர் மற்றும் குடும்பத்தினருடன் மியாமியில் கொண்டாடினார். 


இதில் பிரியங்காவின் அம்மா மது சோப்ரா, தங்கை பரினீத்தி ஆகியோர் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்று கலந்து கொண்டனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரியங்கா சிகரெட் பிடிக்க, அவரின் கணவரும், அம்மாவும் சுருட்டு பிடித்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 


அந்த படங்களுக்கு வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. “பிரியங்கா சோப்ரா இந்தி படங்களில் நடித்தபோது, “யாரும் புகைப்பிடிக்க வேண்டாம்” என்றார். ஹாலிவுட்டுக்கு சென்றபிறகு புகை பிடிக்கிறார். தனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது என்றும், அதற்கு மருந்து சாப்பிடுகிறேன் என்றும் ஏற்கனவே கூறியிருந்தார். 

புகைப்பிடிப்பவர்களை கண்டால் தனக்கு பிடிக்காது என்றும் கூறியிருந்தார். அப்படிப்பட்டவர் புகைப்பிடிக்கலாமா? நன்றாக நடிக்கிறார்” என்றெல்லாம் கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நிறுவனத்தையோ அல்லது பொருளையோ விளம்பரம் செய்யும் வகையில் ஒரு போஸ்ட் போடுவதற்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.

அதே வேளையில், கிரிகெட் வீரர் விராட் கோலி தனது சமூக வலைத்தள பக்கங்களில் விளம்பரம் செய்ய 1 கோடியே 31லட்சமும், அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா 76 லட்சமும் சம்பளமாக வாங்குகிறார்கள்.