தமிழ் பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சோனா. இவர் மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் முன்னணியில் இருந்த சமயத்தில் இயக்குனர் சரண் மீது பாலியல் புகார் ஒன்றை வைத்தார். அதன் பிறகு, ஆள் எங்கே போனார் என்றே தெரியவில்லை.
இதனால், சமீபகாலமாக அவருக்கு புதிய படங்கள் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவதார வேட்டை படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து சோனா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, எனக்கு கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து சலிப்படைந்து இருப்பார்கள்.
இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என்றும் முடிவு செய்தேன். நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பிறகு புதிய படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை.
இதனால் 2 வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். அதுபற்றி கவலைப்படவில்லை. இப்போது மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறேன். மலையாள படம் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம். அங்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன.
குணச்சித்திர வேடங்களில்தான் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அவதார வேட்டை படத்தில் வில்லியாக நடித்து இருக்கிறேன். இந்த படத்துக்கு பிறகு வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க அழைக்கின்றனர். தொடர்ந்து வில்லியாக நடிக்க ஆசை இருக்கிறதுeஎன கூறினார். இப்போது, சில மலையாள படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டிவருகிறார்.