பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் தோன்றினார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டில்லியில் நடைபெறுவதாக இருந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொள்ள அதன் ஏற்பாட்டாளர்களிடமிருந்து 37 லட்சம் ரூபாய் பணம் பெற்றிருந்தார்.
ஆனால் திட்டமிட்டபடி இவர்கள் கலந்து கொள்ளாததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நடிகைகளிடம் பணத்தை திருப்பிக் கேட்டனர். அவர்கள் கொடுக்காததால் ஏற்பாட்டாளர்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சோனாக்ஷியின் வீட்டிற்கு போலீசார் நேற்று சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சோனாக்ஷி சார்பில் பதில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சோனாக்ஷி தனது டுவிட்டரில் "நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. இப்போது என் புகழை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.


