2019 உலகக்கோப்பை வரலாறு ஒரு மறக்க முடியாத விஷயமாக மாறிவிட்டது. ஆம், லீக் போட்டிகளில் வெற்றி மேல் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த இரண்டு அணிகளும் அரையிறுதி நாக்-அவுட் முறையில் நடந்ததால் வெளியேறின.
இது இரு நாட்டு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் அரையிறுதியில் முதல் இடத்தில் உள்ள இரண்டு அணிகளுக்கு போட்டி வைத்து வெற்றி பெறும் அணியை இறுதி போட்டிக்கும்.
இரண்டாம் அரையிறுதி போட்டியில் மூன்று மற்றும் நான்காம் இடம் பிடித்த அணிகளை மோதவிட்டு வெற்றி பெரும் அணியை முதல் அரையிறுதியில் தோற்ற அணியுடன் மூன்றாம் அரையிறுதியில் மோதவிட்டு தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணியை தேர்வு செய்திருக்க வேண்டும்.
ஆனால், நாக்-அவுட் முறையில் இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கின்றது. பிறகு ஏன், லீக் போட்டிகளை ராபின் ரவுண்ட் முறையில் நடத்தினீர்கள் என்று ICC-ஐ வெளுத்து கட்டி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும், எல்லாம் நடந்து முடிந்த பிறகு புலம்புவதில் எந்த பயனும் இல்லை என்கிறார்கள் ஒரு தரப்பு ரசிகர்கள்.


