22 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகவுள்ள விஜய் படத்தின் இரண்டாம் பாகம்..!


நடிகர் விஜய்யின் உயரம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பல வெற்றிகளை பார்த்துள்ள இவரது ஆரம்ப காலம் அவமானங்கள் நிறைந்தது. அதனை, பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நடை போட்டு வெற்றி சிகரத்தை அடைந்துள்ளார். 

கடந்த, 1997-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான லவ்-டுடே திரைப்படம் விஜய்யின் சினிமா வரலாற்றில் குறிப்பிடதக்க திரைப்படம் என்று சொல்லலாம். இந்த படத்தை இயக்கியவர், இயக்குனர் பாலசேகரன். இந்த படம் குறித்தும், நடிகர் விஜய்யின் வளர்ச்சி குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 


அவர் கூறுகையில், விஜய் இப்போது உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். அப்போது இருந்த அதே அமைதி, பணிவு இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் இருபது வருடம் ஆனாலும் அப்படியே தான் இருக்கும். லவ்-டுடே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன். 


விஜய் எப்போதுமே, மற்றவர்கள் பேசுவது கவனமாக கேட்பவர்.ஆனால், கேமரா முன்பு வந்தால் வேறு ஒரு ஆளாக மாறிவிடுவார். என்று கூறியுள்ளார். காலத்திற்கு ஏற்றார் போல மாறி, தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து வரும் விஜய் மீண்டும் லவ்-டுடே இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா.? என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Previous Post Next Post
--Advertisement--