80, 90களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். பிறகு, வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.
சமீபத்தில், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு கோக்குமாக்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய குமாரராஜா தியாகராஜன் இயக்கிய இப்படத்தில் அந்த கதாபத்திரத்தில் நடிக்க நடிகை நதியா மறுத்துவிட்ட நிலையில் ரம்யா கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டு நடித்தார்.
இவருக்கு இப்போது 48 வயதாகின்றது. ஆனால், இப்போதும் இளம் நடிகைகள் போன்று இரவு நேர பார்ட்டி போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு இரவு நேர பார்டியில் கலந்து கொண்ட அவர் மாடர்னான உடையில் மதுக்கோப்பைகள் குவிந்திருக்கும் ஒரு டேபிளின் முன் நின்று கொண்டு தனது தோழிகளுடன் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்கள்மத்தியில் கவனத்தை பெற்று வருகின்றது.



