தளபதி 64 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் - பாலிவுட்டில் இருந்து ஒருவர் டோலிவுட்டில் இருந்து ஒருவர்..!


அட்லீ உடனான ‛பிகில்' படத்தை முடித்துவிட்டார் விஜய். தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது. அடுத்தப்படியாக ‛மாநகரம், கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். 

இது தொடர்பான செய்தி ஏற்கனவே வந்தபோதும், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்யின் 64வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்.,ல் துவங்குகிறது.


‛கத்தி' படத்திற்கு பின் இப்படம் மூலம் மீண்டும் விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அடுத்தாண்டு கோடையில் படத்தை வெளியிடுகின்றனர். 


இதுவரை இந்த படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற நம்பதகுந்த வட்டரங்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன. 

மேலும், கீதா கோவிந்தம் படத்தில் நடித்த "ராஷ்மிகா மந்தன்னா"-வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--