தளபதி 64 படத்தின் கதாநாயகி - உஷாரான இளம் நடிகை..!


'பிகில்' படத்திற்குப் பிறகு 'மாநகரம், கைதி' படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

அனிருத் இசையமைக்கிறார் என்பதையும், மற்ற சில தொழில்நுட்பக் கலைஞர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகி, 2020 கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்பதால் படத்தின் நாயகி யார் என்பதை இப்போதே முடிவு செய்திருக்க வேண்டும். இதுவரையில் படத்தின் நாயகி யார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.


தமிழில் தற்போதுள்ள முன்னணி நடிகைகள் அவருடன் கடைசி நான்கு படங்களில் நடித்துள்ளார்கள். இதனால், தற்போதுள்ள நடிகைகளுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்குவார்களா..? அல்லது ஹிந்தியிலிருந்து முன்னணி நடிகை யாரையாவது வரவழைப்பார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். 


இந்த படத்திற்க்கானஹீரோயின்கள் தேர்வு பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தன்னா ஆகியோர் தான். 

ஒரு பேட்டியில், நடிகை ராஷ்மிகா மந்தன்னா தளபதியின் அடுத்த படத்தில் நடிக்குமாறு என்ன அணுகினார்கள் என்றும் நடிப்பேனா..? மாட்டேனா..? என்பதை விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.ஏனென்றால், முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய் மொழியாக சில நடிகைகளிடம் ஒப்பந்தம் போடுவார்கள். 

ஆனால், இறுதி நேரத்தில் ஹீரோயினை மாற்றி விடுவார்கள். அவரசரப்பட்டு முன் கூட்டியே நடிக்கிறேன் என்று கூறி விட்டால் பிறகு மூக்குடைந்து போக நேரிடும் என்பதால் உஷாராக பேசியுள்ளார் நடிகை ராஷ்மிகா. உஷாரான பொண்ணு.. பிழைச்சுக்கும் என்கிறார்கள் கோலிவுட்வட்டாரங்கள்.

Advertisement