நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துள நிலையில். அவர் நடிக்கும் தளபதி 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்தை விஜயின் தாய் மாமாவான பிரிட்டோ தயாரிக்கவுள்ளாராம்.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 4ம் தேதி துவங்கவுள்ளதாகவும்,2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ட்விட்டரில் #Thalapathy64 மற்றும் #Summer2020 என்ற இரு டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
மேலும், இந்த படம் ஜன்ரஞ்சகமான திரில்லர் படமாக இருக்கும் என்றும் விஜய்யின் ஆக்சன் திறைமையை அடுத்த லெவலில் காட்டும் படமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும், இப்படியான ஜானரில் தன்னுடைய சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக விஜய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Tags
Thalapathy 64