தளபதி 64’ படத்தை இன்னார்தான் இயக்கப்போகிறார் என்று பல முன்னணி இயக்குநர்கள் பெயர் அடிபட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவ்வளவாக பிரபலமாக இளைய தலைமுறை இயக்குநரைத் தேர்வு செய்திருக்கிறார் நடிகர் விஜய்.
தீபாவளி ரிலீஸைக் குறிவைத்து படப்பிடிப்பு நடந்துவரும் ‘பிகில்’ படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சுதீப் கிஷன், ரெஜினா உட்பட பலர் நடிப்பில் வெளியான ’மாநகரம்’ படத்தை இயக்கியவர் புதுமுகம் லோகேஷ் கனகராஜ் "தளபதி 64" படத்தை இயக்கம் வாய்பை பெற்றுள்ளார்.
பிகில் படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விஜய்யிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. சற்றும் எதிர்பாராத அழைப்பால் விஜய்யைச் சந்திக்க சென்றார் லோகேஷ் கனகராஜ்.
கதை சொல்லுங்கனா கேக்கலாம் என்று கேட்டுள்ளார் விஜய். அதிர்ந்து போல லோகேஷ் கனகராஜ் தன்னிடம் இப்போதைக்கு முழுநீள ஸ்கிரிப்ட் இல்லையென்று தன்னிடம் இருந்த கதையின் கருவை மட்டும் சொன்னாராம்.
இதனை கேட்ட விஜய்க்கு உடனே பிடித்துவிட, ‘முழுக்கதையையும் ரெடி பண்ணுங்ணா நீங்கதான் என்னோட அடுத்த படத்தை டைரக்ட் பண்ணனும்’ என்று அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தன்னா நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவலின் படி பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகிறார்கள்.
Tags
Thalapathy 64