அம்மாடியோவ்..! தளபதி 64 படத்தின் வில்லன் இந்த முன்னணி நடிகரா..? - தியேட்டர் என்னத்துக்கு ஆவுறது..!?!?


அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. 

தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது. 


இந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். 


மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது போதுமே..! வேற என்ன வேணும் என விஜய் ரசிகர்கள் டபுள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய் - விஜய் சேதுபதி காம்போ-வா..?tதியேட்டர்eஎன்னத்துக்கு ஆவுறது என ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சி திளைப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.