கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத் இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் தளபதி 64 படம் மூலம் விஜய்யுடன் இணைந்துள்ளார்.
கத்தி படத்தின் எல்லா பாடல்களும் ஹிட் அடித்தன. குறிப்பாக, படத்தின் தீம் மியூசிக்-கை கத்தியை பயன்படுத்தி இசையமைத்து அசத்தினார். பிகில் படத்தின் ரிலீசுக்கு முன்பே தொடங்கவுள்ள "தளபதி 64" படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் இயக்குகிறார்.
இந்த படத்தை விஜய்யின் உறவினர் ஒருவர் தயாரிக்கிறார். இந்த படத்தில் பணியாற்றுவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அனிருத் " ஐந்து வருடங்களுக்கு பிறகு தளபதி படம் கமிட்டானது மகிழ்ச்சி, படத்தின் வேலைகளில் ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய பெஸ்ட்டை கண்டிப்பாக கொடுப்பேன்" என கூறியுள்ளார்.