ராகுல் பரீத் சிங் நடிச்சாலே அந்த படம் ப்ளாப் தான் - பிரபல நடிகை கடும் விமர்சனம்


தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்த நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியையே சந்தித்து வருகின்றன. 

தமிழில், என்ஜிகே, தேவ் படம் வந்து பிளாப் ஆன போதே ராகுல் ப்ரீத்தை மிக மோசமாக விமர்சித்தார் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி. 


இந்நிலையில் ராகுல்-நாகார்ஜூனா ஜோடியாக நடித்த மன்மதுடு 2 படமும் மண்ணை கவ்வியுள்ளது. திரையிட்ட இடங்களிலெல்லாம் நஷ்டம் பெரிய பிளாப் ஆகியுள்ளது. 


ஒரு படம் ஹிட் லிஸ்டில் சேர வேண்டுமானால் முதல் தகுதி குடும்பத்துடன் படத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் எழ வேண்டும். ஆனால், மன்மதுடு 2 படத்தின் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் பதினெட்டுக்கு மேல் ரகம். இதுவே படத்தின் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு காரணம்.

இதை பற்றி சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கடுமையாக ட்ரோல் செய்து பேஸ்புக்கில் பேசியுள்ளார். "ராகுல் நடிக்கிறார் என சொன்னபோதே அந்த படம் பிளாப் ஆகும் என எனக்கு தெரியும்" என அவர் கூறியுள்ளார். 

Previous Post Next Post