தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக நடித்து வருகிறார்.
இப்போது கூட இளமையான தோற்றத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, சூர்யா உட்பட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போதும் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் லண்டன் பறந்துவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் அங்கிருந்தபடி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார்.
அந்த வகையில், சமீபத்தில், நீச்சல் உடையில் தண்ணீருக்குள் நடனமாடிய படி நடிகை இலியானா படத்தை வெளியிட்டார். அவரைப் போல், நடிகை த்ரிஷாவும் தற்போது தண்ணீருக்குள் படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.




