" விளையாட்டுக்கு சொல்றானு தானே நெனச்சேன் " - பிணமாக தொங்கிய மனைவி - துயரத்தில் பாகுபலி பட நடிகர்


பிரபல சீரியல் நடிகர் மது பிரகாஷ். இவர், தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்திலும் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவரின் மனைவி பாரதி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது கணவர் ஷூட்டிங் சென்றுவிட்டு சரியாக வீட்டிற்கே வருவதில்லை என்பதால் அவர் கடந்த சில நாட்களாகவே சண்டையிட்டு வந்துள்ளார்.



சம்பவம் நடந்த அன்று கணவர் மது பிரகாஷிடம் சரியாக இந்த நேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிட வேண்டும் இல்லையென்றால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என "பாரதி" கூறியுள்ளார். 


ஆனால், எதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என்று எண்ணிய மது பிரகாஷ் அதை கேட்காமல் நீண்ட நேரம் கழித்து தான் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது தான் தெரிந்தது தனது மனைவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று. 

பதறிப்போன, மதுபிரகாஷ்  விளையாட்டுக்கு சொல்றானு தானே நெனச்சேன் இப்படி பண்ணிட்டாளே என்று கதறியுள்ளார். இது குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். தற்போது பாரதியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
Previous Post Next Post