அய்யோ, அவரு மாதிரிலாம் யாராலயும் இருக்க முடியாது - அஜித் குறித்து பிரபல நடிகர்


நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. ரீமேக் படத்திற்கு இத்தனை கோடி வசூலா..? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. 


ப்ளாக் பஸ்டர் ஹிட் என்ற வரிசையில் இடம் பெற பயணித்து கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை ஒரு பக்கம் இருக்க, தனது அடுத்த படத்திற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறார் அஜித்குமார். 


நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை பதிவு செய்தனர். 


இந்நிலையில், பிரபல துணை நடிகர் ராஜ்குமார் ஒரு பேட்டியில் அஜித் குறித்து கூறும் போது, அவரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார்னா.. அங்க இருக்க ஆபிஸ் பாய் அவர் முன்னாடி வந்தாலும் சாப்டிங்களா..? என்று கேட்பார். இன்னும் இல்லை என்று கூறினால், முதலில் போய் சாப்ட்டு வாங்க என்று கூறுவார். ஒருத்தரை கூட வா, போ என்று பேசமாட்டார். அவ்வளவு மரியாதையாக நடந்து கொள்வார். அய்யோ, அவரு மாதிரிலாம் யாராலயும் இருக்க முடியாது " என கூறியுள்ளார் ராஜ்குமார்.