நடிகை சாக்ஷி அகர்வால். இவர் சென்னைப் பெண். இவர் பெங்களுரில் மாடலாக பணியாற்றி பின் சினிமாவுக்குள் நுழைந்தார். கன்னட படமொன்றில் அறிமுகமான அவர் பின் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.
கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வந்தார். நிறைய விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் கலக்கி வந்தார்.
சென்னையில் செட்டிலான இவர் ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்தார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படி இந்த படத்தின் மூலம் அவர் பிரபலமாகவில்லை.
மேலும், யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராகசென்று சில பல காதல் சர்ச்சைகளில் சிக்கி பெரிதாக எந்த ஒரு எதிர்ப்பையும் சம்பாதிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறுகிறார்கள். இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தவறு செய்யுங்கள். அதிலிருந்து அறிவை பெற்று வெற்றி பெறுங்கள் என்ற வாசகத்தை இணைத்துள்ளார்.



