கதறிய ஊர் மக்கள் - கேட்காமல் இளைஞர் எடுத்த விபரீத முடிவு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ


தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டை என்ற மாவட்டத்தை சேர்ந்த கடவெருகு கிராமத்தில் வசிப்பவர் "பொம்மல யாதகிரி". இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பொறுமையிழந்த யாதகிரியின் மனைவி அவரது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். 

யாதகிரி பல முறை அழைத்தும் அவரது மனைவி வீட்டிற்கு வர மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த யாதகிரி ஊரில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 


யாதகிரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பற்றிய தகவல் அறிந்து அவருடைய குடும்பத்தினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை சமாதானம் செய்து கீழே இறங்குமாறு கதறினார். நாங்கள் பேசி அழைத்து வருகிறோம். நீ முதலில் கீழே இறங்கு எனவும் கூச்சலிட்டனர். 


ஆனால், நான் சாகப்போறேன் என்று கத்தியபடியே யாதகிரி திடீரென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்து விட்டார்.  கீழே புல் பூண்டுகள் அதிகம் இருந்ததால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் காப்பற்றப்பட்டார் யாதகிரி. ஆனாலும், பதறிப்போன உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் படுகாயம் அடைந்து கிடந்த யாதகிரியை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தெலுங்கான மற்றும் ஆந்திர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post