இனிமே யாராச்சும் என்ன பத்தி பேசுனீங்க..-கொலை மிரட்டல் ஆடியோ குறித்து கொந்தளித்த நடிகை மீரா மிதுன்..!


பிரபல மாடல் அழகியும், சீட்டிங் சாம்பியனுமான மீரா மிதுன். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேரன் மீது இடுப்பு பிடி புகாரை தொடர்ந்து வெளியே அனுப்பப்பட்டார். 

தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிவரும் நடிகை மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் என்பவர் கொடுத்த புகார் காரணமாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மீரா மிதுன் பேசிய ஒரு ஆடியோவும் பரவியது. 

இந்த சர்ச்சை பற்றி பேட்டி அளித்துள்ள மீரா மிதுன், "என்னுடைய போன் என்னுடைய மேனேஜர் இடம் தான் இருந்தது. நான் படத்திற்காக டப்பிங் பேசிய ஆடியோ உட்பட பல விஷயங்கள் அந்த போனில் இருந்தது. நான் பிக்பாஸில் இருந்து வந்தபிறகு மீடியாவில் ஜோ மைக்கேல் கொடுத்த பேட்டிகளை பார்த்து கோபத்தில் பேசியது அது. 


நான் கூலிப்படை வைத்தேனா. என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது. அந்த ஆடியோ நான் சரியாக கேட்கவிலை. நான் பேசியதை எல்லாம் மிக்ஸ் செய்து இப்படி போட்டிருக்கலாம்" என கூறியுள்ளார். 


மேலும் தன்னுடைய மேனேஜர் ஏன் ஜோ மைக்கேல் இடம் பணத்திற்காக சென்று சேர்ந்தார் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். "ஒரு பெண்ணை பற்றி இப்படியா பேசுவது. நான் இதையெல்லாம் பார்த்து டிப்ரஷனில் தற்கொலை பண்ணியிருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க. 

தினமும் என அம்மாவுக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். வீட்டிற்கும் ரௌடிகளை அனுப்புகின்றனர். இனிமேல் என்னை பற்றி ஆதாரம் இல்லாமல் மீடியாவில் நான் ஏமாற்றிவிட்டேன் என புகார் சொல்பவர்கள் மீது முதலில் எப்ஐஆர் போடுவேன். 

இத்தனை நாள் இருந்தது போல இனி விடமாட்டேன்" என மேலும் மீரா மிதுன் கோபத்தில் பேசியுள்ளார்.