நடிகை ஆண்டிரியா சினமாவில் பின்னணி பாடகியாக இருந்து பிறகு நடிகையாக உயரந்தவர். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து படங்கள் நடித்து வந்த இவர். சமீபத்தில், படங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் "வட சென்னை" இந்த படத்தில் மேலாடை இன்றி நடித்தது மட்டுமில்லாமல் கெட்ட வார்த்தைகள் பேசியும் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். தொடர்ந்து, படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறார்.
இதனால், இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில், எதனால் வடசென்னை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வில்லை என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, எனக்கு இருந்த மன அழுத்தம் உடல் மற்றும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு சில காலம் விலகி இருந்தேன். பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். காபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த எனக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது எளிதான காரியமாக தெரியவில்லை.
ஆனாலும் மருத்துவ சிகிச்சையில் கஷ்டப்பட்டு என்னை ஈடுபடுத்தினேன். காலையில் ஒரு கப் மூலிகை தேநீர் அருந்திவிட்டு யோகா செய்து அன்றைய நாளை தொடங்கினேன். அந்த சிகிச்சை முறை பலவீனமான இதயம் உள்ளவர்களால் கடைப்பிடிக்க முடியாது.
நான் சிகிச்சையின்போது அங்கிருந்து வெளியேறி விட நினைத்தேன். ஆனாலும் அந்த உணர்வில் இருந்து மீண்டு மருத்துவர்கள் ஆலோசனையை பின்பற்றி நடந்தேன். இப்போது என்னை புதியவளாக உணர முடிகிறது. மருத்துவ குழுவினருக்கு நன்றி.என்று கூறியுள்ளார்.


