பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் மாடல் மற்றும் விளம்பர பட நடிகை அபிராமியும் ஒருவர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலேயே நடிகர் கவினை காதலிக்கிறேன் என்று குண்டை தூக்கி போட்டவர். மேலும், என் அம்மா, சரவணன் மீனாட்சி நாடகம் பார்க்கும்போது,
தமிழ் (கவின்) நல்லா இருக்கான் இல்லை அம்மா என்று கூறுவேன்.
நானும் கவினும் ஃபேஸ்புக் நண்பர்கள். முதலில் அவர் பெயரில் உள்ள போலியான கணக்கில் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது ஆச்சரியப்பட்டேன். பிறகுதான் அது போலியான கணக்கு எனத் தெரிந்தது. பிறகு அவரிடம் கேட்டேன். அது போலி என்றார். இங்கு அவர் வந்தவுடன் நான் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறினேன்.
நான் தான் அவருக்கு முதலில் வாழ்த்து சொன்னதற்குச் சந்தோஷப்பட்டேன். அவர் என்னை வாங்க போங்க என்று அழைக்கிறார். இந்த மூஞ்சியிடம் எப்படிச் சொல்வது, உங்கள் மேல் எனக்குக் கிரஷ் இருந்தது என, கேவலமாக இருக்கும். இருந்த மரியாதையும் போய்விடும் என நினைத்தேன். இதனால் தான் காதலை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தேன் என கூறினார்.
தொடர்ந்து, வாரா வாரம் நடக்கும் பிரச்னைகளை தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்ட அபிராமி இப்போது மலேசிய பாடகர் முகென்-னுடன் நெருக்கமாக சுற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதனுடன் , யூ ஆர் மைன் மற்றும் ஹேப்பி பர்த் டே பேபி போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அபிராமி இதெல்லாம்..? பிக்பாஸ் வீட்டில் கவின்-ஐ காதலிக்கிறேன் என்று கூறினீர்கள். இப்போது, முகெனுடன் நெருக்கமாக உள்ளீர்கள்..? வெளியே இன்னொரு ஆணுடன் காதலில் இருகிறீர்கள்../ என கிண்டலடித்து வருகிறார்கள்.