உங்களுக்கு உயிறு மேல ஆசையில்லையா தளபதி.? - வைரலான வீடியோ - நடிகர் விஜய்யை கேள்வி கேட்கும் ரசிகர்கள்..!


நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் குறித்து செல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..? அவர் எதை செய்தாலும் உலக அளவில் ட்ரென்ட் செய்து அழகு பார்க்கும் ரசிகர்கள். 

அப்படிபட்ட ரசிகர்களே இப்போது நீங்களே இப்படி செய்யலாமா தளபதி என கேள்வி விஜய்யிடமே எழுப்பி வருகிறார்கள். நடிகர் விஜய் இப்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகளும் கிட்டதட்ட முடிந்துவிட்டன. 


இன்னும் ஒரு சில காட்சிகளே எஞ்சியுள்ள நிலையில், நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதில், நடிகர் விஜய் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன.


இதனை பார்த்த ரசிகர்கள், என்ன தளபதி நீங்க தானே தெறி படத்துல "உனக்கு, உயிறு மேல ஆச இருந்தா ஹெல்மேட்ட போடு..!:-ன்னு பாட்டு பாடுனீங்க..? இப்போ, நீங்களே ஹெல்மேட் போடாம போறீங்களே..? உங்களுக்கு உயிறு மேல ஆசையில்லையா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--