தமிழ் சினிமாவை விட்டுவிட மாட்டேன் என்று நடிகை நீது சந்திரா கூறினார். தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா.
சிங்கம் 3 படத்தில் "ஓ சோனே, சோனே சூப்பர் சோனிக்" என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இப்போது ஆர்.கே.நடிக்கும் ’வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூரும்போது, ‘இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். இது மர்டர் மிஸ்டரி படம். தமிழ் ரசிகர்கள் நல்ல கதையுள்ள படங்களை ஏற்பார்கள்.
இந்தப்படத்தையும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். நான் இந்தி படங்களில் நடித்துவந்தாலும் தமிழ்ப் படங்களை கைவிட்டுவிட மாட்டேன். ஏனென்றால் எனக்கு அடையாளம் தந்தது தமிழ் சினிமாதான். தமிழில் இருந்து நிறைய கதைகள் வந்தது.
என் இமேஜுக்கு ஒத்துவராத கதைகளாக இருந்தால் அவற்றை ஏற்கவில்லை. இப்போது பெரிய நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வரும்’ என்றார்.
இந்நிலையில், படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில்uஉடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் பிகினி உடையில் சூரிய குளியல் எடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசியக்ர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.




