பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன். ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான "டர்ட்டி பிக்சர்ஸ்" என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்கை வரலாறு படமான இந்த படத்தில் வித்யா பாலன் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டார். படுகையறை காட்சி, மேலாடை இன்றி தோன்றும் காட்சி, படுக்கையறை காட்சி என கலக்கினார்.
சமீபத்தில் வெளியான, நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனக்கு நடந்த பாலியல் சீண்டல் முயற்சி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் சென்னையில் வசித்து கொண்டிருக்கும் போது ஒரு இயக்குனர் என்னிடம் அவரது படத்தில் நடிக்குமாறு கேட்டார். நாங்கள் பிரபல காஃபி ஷாப் ஒன்றில் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தோம்.
ஆனால், நிறைய பேச வேண்டும் ரூமிற்கு போகலாமா என்றார். இல்லை இங்கேயே பேசலாம் என்றேன். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் இன்னும் நெறைய பேசணும் வா.. ரூமிற்கு போகலாம் என்று ரூமிற்கு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தார்.
அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று புரிந்தது. என்னநடக்கிறது பார்த்து விடலாம் என ரூமிற்கு சென்றேன். ஆனால், கதவை சாத்தாமல் வைத்திருந்தேன். என்னிடம் பேசிக்கொண்டே அடிக்கடி கதவை பார்த்தார்.
நான் தெரிந்தும் தெரியாதது போல இருந்தேன். ஒரு கட்டத்தில், கடுப்பாகி கதையை முழுவதுமாக கூறாமல் பதியிலேயே எழுந்து சென்று விட்டார் என்று கூறியுள்ளார் வித்யாபாலன்.
Tags
Vidya Balan